கார் மோதியதில் பஞ்சர் கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளகோவில் பேருந்து நிலையம் அருகில் மெயின் ரோட்டில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி தனது கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் தாறுமாறாக ஓடி சின்னசாமி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அருகிலுள்ளவர்கள் வெள்ளகோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னசாமியின் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோயம்பத்தூர் பகுதியில் வசிக்கும் டிரைவரான திருமூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.