Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இது வரக்கூடாது…. சுரங்களின் முன்பாக போராட்டம்…. தொழிற்சங்கத்தினர்களின் துண்டு பிரசுரம்….!!

தேசிய பணமாக்கும் திட்டத்தை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மத்திய நிதி அமைச்சகத்தால் தேசிய பணம் மக்கள் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான மின் உற்பத்தி, விமான சேவை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம், ரயில்வே, மின்பகிர்மானம், தொலைத்தொடர்புதுறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் 6 லட்சம் கோடி மதிப்புடைய பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமாக தேசிய பணமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால் இதனை கண்டித்து என்.எல்.சி. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பாக நெய்வேலியில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அதில் சுரங்கம் நுழைவாயிலின் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கியுள்ளார். இதனை போல் என்.எல்.சி சுரங்கம் முன்பாக தொழிற்சங்க பொருளாளர் சீனிவாசன் தலைமையிலும், அனல் மின்நிலையம் நுழைவாயில் முன்பாக பொதுச் செயலாளர் ஜெயராமன் தலைமையிலும், என்.எஸ்.யு பகுதியில் துணைத் தலைவரான மணிமாறன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தேசிய பணமாக்கல் திட்டத்தை அமல்படுத்தினால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Categories

Tech |