Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் பருவமழை…. அதிகரிக்கும் நீர்வரத்து…. அதிகாரிகள் கண்காணிப்பு….!!

அணைகளிலிருந்து அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14, 000 கன அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனையடுத்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து 16, 500 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.

இதன் காரணத்தினால் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சினி பால்ஸ், ஐந்து அருவி மற்றும் மெயின் அருவிகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. பின்னர் காவிரி ஆற்றின் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருப்பதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் வராமல் ஒகேனக்கல் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க சோதனைச் சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |