Categories
மாநில செய்திகள்

பாஜக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சி… அண்ணாமலை பெருமிதம்…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. பலமுறை மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பாஜக தலைவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக பாஜக ஆட்சி திகழ்கிறது என்பதை முதல்வரின் மனசாட்சியின் உணரும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு அரசியல் காரணத்திற்காக திமுக அரசு குறுக்கே நிற்பது வேதனை அளிப்பதாக உள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை கூறியுள்ளார்.

Categories

Tech |