Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமி பலாத்காரம்….. கேரள இளைஞனுக்கு பொதுமக்கள் தர்ம அடி….. கோவையில் பரபரப்பு….!!

கோயம்பத்தூரில் 5 வயது  சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்த இளைஞனை ஊர் மக்கள் தர்ம அடி  கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பர் முருகன் மற்றும் ஆனைமலை நண்பர் ஒருவருடன் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். பின் போதை தலைக்கேறிய நிலையில் ஆனைமலை நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார் கார்த்தி. அங்கே அவரது 5 வயது பெண் குழந்தையை அழைத்து பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார் கார்த்தி.

Image result for சிறுமி பாலியல் பலாத்காரம்

நீண்ட நேரமாகியும் சிறுமியும் கார்த்தியும் வராததால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் கார்த்திக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். பின் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் கார்த்தி. வீட்டிற்கு வந்த குழந்தையை பார்வையிட்ட பொழுது உடலில் ஆங்காங்கே வீக்கமும் காயமும் குழந்தைக்கு ஏற்பட்டிருந்தது. இதை கண்ட பெற்றோர்கள் பெண் குழந்தையிடம் விசாரித்தனர். அதில் கார்த்தி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

Image result for சிறுமி பாலியல் பலாத்காரம்

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை கார்த்தியை  அரிவாளால் வெட்டினார். பின் அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓட சிறுமியை வாலிபர் பலாத்காரம் செய்த தகவல் ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. தப்பி ஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்தி மற்றும் அவருக்கு துணை போன முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |