Categories
உலக செய்திகள்

காபூல் நகரில் தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதி கொலை.. அமெரிக்க இராணுவம் அதிரடி..!!

காபூல் விமான நிலையத்தில், 170 பேர் உயிரிழந்த கொடூரத் தாக்குதலுக்கு காரணமானவர்களை அமெரிக்க படை, ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். எனவே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு, தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க படையை சேர்ந்த 13 பேர் உட்பட 170 நபர்கள் உயிரிழந்தனர்.

இதனால், கடும் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், வெள்ளைமாளிகையில் இத்தாக்குதலை நடத்தியவர்களுக்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று கூறியிருந்தார். எனவே, அமெரிக்க ராணுவ படை, அதிபரின் வார்த்தையை உண்மையாக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் என்ற மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். கோரசான் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குவதற்கு ட்ரோன் அனுப்பப்பட்டது.

ட்ரோன், ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது குண்டு வீசி தாக்கியதில், காபூல் விமான நிலையத் தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த தாக்குதலால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவு தளபதியான பில் அர்பன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |