2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொள்ளவிலை ஓடைக்கரை பகுதியில் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி இரும்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த குத்துவிளக்குகள், வெண்கல மணிகள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.