கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் குட்டியுடன் நின்றதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்கள் கரும்புகளை சாலையோரம் வீசி செல்வர். இதனை யானைகள் தின்று விட்டு மீண்டும் லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கும்.
இந்நிலையில் காராபள்ளம் என்ற இடத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்துள்ளது. இந்த காட்டு யானைகள் சுமார் 30 நிமிடங்கள் சாலையிலேயே நின்றதால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு லாரிகள் அந்த வழியாக வராததால் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்த்தில் இருக்கின்றனர்.