கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன் சுத்தமல்லி கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமலிங்கம் அவரது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை அடுத்து ராமலிங்கத்தின் சகோதரரான ராஜசேகர் என்பவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.