நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேராம்பட்டு பகுதியில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியன்று அதிகாலை நேரத்தில் தனது வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் பச்சையப்பனை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால குண்டு பாய்ந்து பச்சையப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பச்சையப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 3 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.