ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 பேர் அமெரிக்க படையினர் உட்பட 100 பேர் பலியாகினர்.
இந்நிலையில் காபூல் பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.