தலீபான்கள் காபூலில் செயல்பட்டு வந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 ஆப்கானிஸ்தர்கள் மற்றும் 2 மலேசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு படைகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்பு விமானங்கள் மூலம் வெளியேற்றியும் வந்துள்ளனர். இதனையடுத்து வரும் 31 ஆம் தேதிக்குள் வெளிநாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன் பின்னரே ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து அறிவிக்கப்படும் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து இராணுவ சரக்கு விமானங்களில் வெளியேற்றியும் வந்துள்ளனர். இதற்கிடையே காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அவர்களை பொறுப்பேற்றுள்ளனர்.
அந்த தாக்குதலில் 13 அமெரிக்க பாதுகாப்பு படையினர் உட்பட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட அதே சமயத்தில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காபூலில் இருந்து செயல்பட்ட நான்கு ஆப்கானிஸ்தர்கள் மற்றும் 2 மலேசியர்களையும் கடந்த 26 ஆம் தேதி தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் தலீபான்கள் கைது செய்த மலேசிய நாட்டை சேர்ந்தவர்களை குறித்து எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. அதாவது தலீபான்கள் 36 நாடுகளில் துருப்புகளை வெற்றி கண்ட எங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு சமாளிப்பது ஒன்றும் கடினமில்லை என அறிவித்துள்ளனர்.