மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் ஏரிக்கோடி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆஷிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது.
அப்போது ஆஷிஸ் தனது விட்டில் ஸ்விட்சை போட்ட போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆஷிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.