ஆப்கானிஸ்தானின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் தலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக முடக்கி விடுவார்கள் என்ற கடும் எச்சரிக்கையினை முன் வைத்துள்ளார்.
பிரபல பத்திரிக்கையாளரான மசூத் ஹொசைனிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பிரான்ஸ்-பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றியதற்காக புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹொசைனி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் விமானம் மூலம் காபூலில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே ஹொசைனி வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் இணைந்து தலிபான்கள் சிறுமிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வது குறித்து சிறப்பு செய்தியினை வெளியிட்டிருந்தார்.
இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேசமயம் ஹொசைனி ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஊடகம் குறித்து கவலை தெரிவித்ததோடு எதிர்காலத்தில் நிலைமை மிகவும் மோசமாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தலிபான்கள் மெதுவாக கொலை செய்ய தொடங்குவதோடு ஊடகத்தை முற்றிலுமாக முடக்கி விடுவார்கள் என்ற கடும் எச்சரிக்கையினையும் முன் வைத்துள்ளார்.