Categories
மாநில செய்திகள்

தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு…. சுற்றுலா பயணிகள் ஷாக்…!!!

தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாரம் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். இதனால் ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் களைக்கட்டியுள்ளது. நட்சத்திர ஏரிகளில் படகு சவாரி செய்தும், ஏரி சாலைகளை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |