நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் 96 பட இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. பிரேம் குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படம் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் பிரேம் குமார் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகர் விஜய் சேதுபதி விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்பட ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களில் நடித்து முடித்துவிட்டு பிரேம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.