Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களுக்கு விளையாட்டு மீது… ” காதலும், ஆர்வமும் அதிகரித்துள்ளது”… பிரதமர் மோடி….!!!

இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பார்க்க முடிகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மண் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் கிராம மக்களிடம் உரையாடுவார். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மக்களுடன் உரையாடினார். அப்போது நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர்.

இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் நம்மால் பார்க்க முடிகின்றது. கிராமங்களில் அதிகப்படியான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்தியாவை பல உச்சங்களை அடைய செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |