Categories
தேசிய செய்திகள்

WOW! 8% வரை கட்டணம் குறைப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே, பயணிகளுக்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயணிகளின் வசதிக்காக புறநகர் ரயில்கள், பேசஞ்சர், மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக ஏசி 3 டயர் எக்கனாமி வகுப்பு பெட்டிகளை பயணிகள் வசதிக்காக அறிமுகம் செய்துள்ளது.

இதில் குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியான பயணத்தை பயணிகள் மேற்கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மொத்தம் 83 படுக்கைகள் இருக்கும். மேலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஏசி 3 டயர்  வகுப்பு பெட்டிகளின் பயணக் கட்டணத்தைவிட ஏசி 3 டயர்  எக்கனாமி வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 8 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |