Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த தொழிலாளி…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

குடிபோதையில் 40 வயதுடைய ஒருவர் சுவர் மேல் எரி பரபரப்பை ஏற்படுத்தியதால் அவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் பகுதியில் 40 வயதுடைய முதியவர் மாடி வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் ஒரு மணி நேரமாக கீழே இறங்கி வராமல் வீட்டின் சுவர் மீது அமர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாடி வீட்டின் சுவர் மீது அமர்ந்திருந்த முதியவரை கீழே இறங்குமாறு கூரியுள்ளனர். பின்னர் கீழே இறங்கி வந்தவரை  பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மதுபோதையில் இருந்த அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் ரமேஷ் என்பதும், கட்டிட வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |