குடும்பத்தகராறு காரணத்தினால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர் அண்ணாநகர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கல்குவாரியில் தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணத்தினால் பழனியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.