தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.