கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு தரப்பிலிருந்து பல்வேறு வகையான திட்டங்கள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் அனைத்தும் இவர்களை சரியாக சென்று சேர்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுடைய பணி நிலவரம் மற்றும் தொழிலாளர் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் புதிய போர்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இ-ஷ்ரம் என்ற வெப்சைட்டை இன்று மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருடைய பணி விவரங்கள் அடங்கியிருக்கும். இதன் மூலமாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் நேரடியாக சென்று சேர இந்த திட்டம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் 30 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1443 என்ற டோல் பிரீ எண் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதை எப்படி பெறுவது என்றும், இந்த திட்டத்தில் பதிவு செய்வது எப்படி? என்பது குறித்தும் இப்போது பார்க்கலாம். முதலில் eshram.gov.in என்ற இணையதளத்தில் சென்று “Register on e-sharm” என்பதை கிளிக் செய்யவும். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை பதிவிட்டு கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட வேண்டும். செல்போன் நம்பருக்கு பக்கத்தில் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு மற்ற விவரங்களையும் பூர்த்திசெய்தால் சம்பந்தப்பட்டவரின் பெயர் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுவிடும். ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்றவையும் அவசியமாகும்.