Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டெங்கு புழுவை உற்பத்தி செய்த 4 நிறுவனங்களுக்கு ரூ25,000 அபராதம்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

தர்மபுரியில் டெங்கு கொசுப்புழுக்களை  உற்பத்தி செய்த 4 நிதி நிறுவனங்களுக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வண்ணம் தூய்மைப் பணியை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுத்தம் செய்யும் பணியிலும் சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது அரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் பழைய இரும்பு கடை, இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் பட்டறைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில்,

Image result for டெங்கு

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறதா என்று சோதனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது 4 நிறுவனங்களில் பழைய டப்பாக்கள் தேங்காய் ஓடுகள் பழைய டயர்கள் தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தேங்கிய தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி செய்வது  கண்டுபிடிக்கப்பட்டது. பெண் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்ததன் பேரில் நான்கு நிதி நிறுவனங்களுக்கும் சுமார் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து வணிக நிறுவனங்கள் உணவகங்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் டெங்கு கொசு புழுக்களை உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |