Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல்…. மூடப்படும் பொது இடங்கள்…. அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்….!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் வரும் 1 ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடவுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸானது பல்வேறு அலைகளாக பரவி அனைவரையும் அச்சுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றானது நான்காவது அலையாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3909 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக 13 நகரங்களில் கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மேலும் 14 நகரங்களுக்கு கட்டுப்பாடுகள் விரிவடைந்துள்ளது. இதனால் மொத்தம் 27  நகரங்களில் கட்டுப்பாட்டுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளானது வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதன்படி அவசிய தேவைகளான பலசரக்கு, மருந்துகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மட்டும்  இரவு 8 மணி வரை செயல்படும். மேலும் 27  நகரங்களில் உள்ள சந்தைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மூடப்படும். குறிப்பாக திருமணம் நடத்தும் மண்டபங்கள், திரையரங்குகள், உல்லாச பூங்காக்கள் நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதிலும் பள்ளிக்கூடங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு 50% மாணவர்களுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |