Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. மீண்டும் விமான தாக்குதல்…. 6 பேர் பலியான சோகம்….!!

காபூலை இலக்காக வைத்து தீவிரவாதிகள் விமான வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு படைகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்டு விமானங்கள் மூலம் வெளியேற்றி வந்துள்ளனர். இதனையடுத்து வரும் 31 ஆம் தேதிக்குள் வெளிநாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன் பின்னரே ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து அறிவிக்கப்படும் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை ஆஃப்கானிஸ்தானில் இருந்து மீட்பு விமானங்கள் மூலம் வெளியேற்றி வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 26 ஆம் தேதி காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகளை வீசி அதே நேரத்தில் துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தேசிய பாதுகாப்பு படையினர் 13 பேர் உட்பட 200 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் கூறும் வகையில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் காபூலில் அடுத்தடுத்து வெடிகுண்டுகளை வீசிய தீவிரவாதி கொல்லப்பட்டாதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது “காபூலில் அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்” என எச்சரித்துள்ளார். இந்நிலையில் அவர் கூறியபடியே கடந்த 29 ஆம் தேதி காபூலில் உள்ள விமான நிலையத்தை இலக்காக வைத்து தீவிரவாதிகள் விமான வெடிகுண்டை வீசியுள்ளனர்.

ஆனால் அந்த வெடிகுண்டு மாறாக காபூல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சென்று அங்குள்ள ஒரு வீட்டின் மீது வேகமாக மோதி வெடித்து சிதறியுள்ளது. இதனால் அந்த பகுதியே அதிர்ந்துள்ளது. மேலும் வானுயரத்திற்கு கரும்புகை எழும்பிள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது வரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் கடந்த 26 ஆம் தேதி காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகளே இதையும் நடத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதன்பின் தீவிரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் குறித்த செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலைப்படை தீவிரவாதிகள் வாகனத்தில் சென்றதாகவும் அவர்களை ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தி கொன்றதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |