Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு : ”சிபிஐ விசாரணையை கண்காணிப்போம்” உயர் நீதிமன்றம் …!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் சி.பி.ஐ விசாரணையை பெண் மூத்த DIG கண்காணிக்க வேண்டும் , பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று  20க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒன்றாக வினித் கோத்தாரி மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது.

இந்த வழக்கில் CBI_யிடம் நீதிமன்றம் சார்பில் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் அறிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கப்பட்டுள்ளது என்றும் , இதுவரை 4 பேர் கைது கைது செய்யபட்டு அவர்கள் சிறையில் தான் இருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் , சிபிஐ வழக்கை  உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.

 கண்காணிக்கும்

Categories

Tech |