8 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எரிகோடிபட்டி கிராமத்தில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இதழினி என்ற 8 மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்தப் பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 8 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சுகுமார் மற்றும் அவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.