தொடர்ந்து பெய்யும் கனமழையால் பயிர் நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி உள்பட 4 பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 3௦௦ ஏக்கர் நெற்பயிர் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
அதன் பின் நெய்வேலி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் விளைநிலங்களில் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.