Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளி வீட்டில் கொள்ளை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளி ஒருவர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் ஓடுகள் பிரிந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அறையின் உள்ளே சென்று பீரோவை பார்த்த போது அதிலிருந்த 10 1/2  பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து சரண்ராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து சரண்ராஜின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் சக்கரவர்த்தி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிறகு 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த போது சரண்ராஜ் வீட்டில் நகைகளை கொள்ளை அடித்தது அவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து விஜயலட்சுமி அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என கண்காணித்து பின் சக்கரவர்த்திக்கு தகவல் தெரிவித்து 2 பேரும் சேர்ந்து சரண்ராஜ் வீட்டின் ஓட்டை பிரித்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |