மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த போலீஸ்காரர் மீது கார் ஏறி இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராயலா நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ்குமார் இரவு நேரத்தில் வேலை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து கோவிந்தன் சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மனோஜ்குமாரின் மொபட் நிலைதடுமாறி சாலையில் அங்கும் இங்கும் சென்றது.
இதனால் மொபட்டில் இருந்து கீழே விழுந்த மனோஜ் குமார் தலை மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஏறி இறங்கியுள்ளது. அதன்பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த மனோஜ் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மனோஜ் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான திருஞானசம்பந்தம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.