Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியில் காவேரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானமொழி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக ஞானமொழி தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ஞானமொழியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஞானமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |