புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்டசபையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாஜகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
Categories