தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்றுக்காக தனது வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது லோகேஷ் என்ற வாலிபர் மணிகண்டன் வீட்டில் திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவரின் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் பின் காவல்துறையினர் லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.