Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டென அறுந்த கிரேன் கம்பி…. 70 அடி உயரத்திலிருந்து விழுந்த தொழிலாளர்கள்…. திருச்சியில் பரபரப்பு…!!

ராட்சத கிரேன் கம்பி அறுந்து விழுந்ததால் கட்டிட தொழிலாளி 70 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் கட்டிட தொழிலாளியான செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தென்னூர் புதூர் நால்ரோடு பகுதியில் மற்றொரு தொழிலாளியான சரவணகுமார் என்பவரோடு கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு தொட்டியில் நின்று கொண்டு சுமார் 70 அடி உயரத்தில் கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கிரேன் கம்பி அறுந்ததால் இரும்பு தொட்டியோடு கீழே விழுந்து படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு செல்வகுமாரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் சரவணகுமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |