Categories
உலக செய்திகள்

குழந்தையுடன் இறந்த இளம்பெண்.. 7200 வருடங்களாக அழியாமல் இருந்த மரபணு.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!!

இந்தோனேஷியாவில் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளம்பெண்ணின் மரபணு அழியாமல் இருப்பது அப்படியே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 2015-ஆம் வருடம், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் சுலாவேசி என்னும் பகுதியில் ஆராய்ச்சி நடத்தினர். தெற்கு சுலாவேசி பகுதியில் வாழ்ந்தவர்களை டோலியன் என்று அழைப்பார்கள். இந்நிலையில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, சுண்ணாம்பு குகைக்கு அருகில் 17 அல்லது 18 வயதுடைய இளம் பெண்ணின் மரபணு கண்டறியப்பட்டது. அந்த இளம்பெண் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார்.

மேலும், அவரின் சடலத்தில் வயிற்றில் ஒரு குழந்தை இருப்பது போல இருந்ததால், அந்தப்பெண் கர்ப்பிணியாக இருந்தபோது இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஆய்வாளர்கள் அந்தப் பெண்ணிற்கு பெஸ்கி என்று பெயரிட்டுள்ளார்கள். உலகில் எந்த இடத்திலும் கிடைக்கப் பெறாத பெண்ணின் எலும்புகளின் மூலம் புதிய மரபணு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக, மண்ணில் புதைக்கப்படும் உடல்களின் டிஎன்ஏ, மண்ணின் ஈரப்பதத்தாலும், வெப்ப மாற்று  நிலையாலும் அழிந்துவிடுகிறது. எனினும், சுமார் 7200 வருடங்களுக்கு பின்பும் இந்த இளம் பெண்ணின் மரபணு மட்டும் அழியாமல் அப்படியே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |