திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யாவிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கௌசல்யா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கௌசல்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.