Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தனிமையில் இருந்த ஆசிரியர்…. மன உளைச்சலினால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமணி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி மற்றும் செந்தாமரை என்ற இரு மனைவிகள் இருக்கின்றனர். தற்போது கலைச்செல்வி பெங்களூரில் வசித்து வருகிறார்.

இதனை அடுத்து செந்தாமரை செய்யாறு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் தனிமையில் இருந்த பழனி மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செந்தாமரை தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பிறகு பழனியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |