நாளை மறுநாள் (செப் 1) முதல் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் செப்.15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கடற்கரைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் செல்ல அனுமதியில்லை.. நாளை மறுநாள் (செப் 1) முதல் திட்டமிட்டபடி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாடு தளங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகளை இல்லங்களில் வைத்து கொண்டாடலாம்.. தமிழகம் முழுவதும் மரிய அன்னை பிறந்தநாள் திருவிழாவிற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள். தனியார் கல்லூரி விடுதிகள் இயங்கலாம்.