சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை- 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. திகில் கலந்த நகைச்சுவைப் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி, யோகி பாபு, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அரண்மனை-3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘அரண்மனைக்குள்ள யாருடா’ என தொடங்கும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா, ராஷி கண்ணாவின் அசத்தலான நடனம் மற்றும் திரில் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.