Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… தாசில்தாரின் அதிரடி சோதனை… 2 பேர் கைது…!!

தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது விருசுழி ஆற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் அள்ளிக் கொண்டிருந்த வரவணி பகுதியை சேர்ந்த ஜேசிபி டிரைவர் தர்மராஜ், மேல்பனையூரை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் கோபால் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிப்பர் லாரி, ஜேசிபி எந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |