முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார், கார்த்திக், குமார், பாலகுமார் ஆகிய 4 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் 4 பேரும் இணைந்து வீட்டிற்கு வெளியே நின்ற சிவகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பின் படுகாயமடைந்த சிவகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமார் உள்பட 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.