Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! மனக்குழப்பம் அதிகரிக்கும்….! கவனம் வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்கள்.! முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் வேண்டும். 

இன்று தயவு செய்து நீங்கள் உங்களுடைய பிடிவாத போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பணவரவு சிறப்பாக அமையும். சந்தோஷமும் நிறைய இருப்பதினால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனக்குழப்பம் அதிகரிக்கும். சில நேரங்களில் தெளிவான முடிவெடுக்க முடியாத நிலை இருக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் நல்ல முறையில் கிடைக்கக் கூடும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பணம் பாக்கிகள் திருப்திகரமாக கையில் வந்து சேரும்.

கொடுத்த கடன் கண்டிப்பாக மீண்டும் வந்து சேரும். வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுகளை நீங்கள் கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் இருக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். பொறுமையாக பேசவேண்டும். அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்விக்காக எடுக்கும் முயற்சியில் மாணவர்களுக்கு வெற்றி கிட்டும். மாணவர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |