தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பொது மக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும்.
சென்னை வேளாங்கண்ணி, நாகை மற்றும் இதர பகுதிகளில் மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின் போது பொது இடங்களில் மக்கள் கூட தடை.
விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட தடை.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் நோய்த்தொற்று தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;,