திருவாரூர் -காரைக்குடி பாசஞ்சர் ரயில் சேவையானது கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த ரயில் சேவையானது மயிலாடுதுறையிலிருந்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை ஜங்ஷனிலிருந்து 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும்.
பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று இந்த ரயில் சேவையானது சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் பாசஞ்சர் ரயில் சேவையாக இருந்த நிலையில் விரைவு ரயில் சேவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.