Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

காரில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா காவல்துறை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரம் பகுதியில் நின்ற 2 கார்களை நோக்கி காவல்துறையினர் சென்ற போது காரில் இருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து காரை சோதனை செய்த போது அதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் குட்கா பாக்குகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களை காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர்கள் சித்திக் மற்றும் முத்துராஜ் என்பது தெரியவந்துள்ளது.

அதன்பின் பெங்களூரிலிருந்து தங்களின் காரில் சென்னைக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 2 லட்சம் மதிப்புடைய ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 32 மூட்டை குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |