கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், ஒருசில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.