இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் நடத்திய சோதனையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் பிரதீப்குமாரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.