அல்சர் குணமாக….
மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் .
தேங்காய் பால்
தேங்காய் பால் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் .
மாம்பழ விதைகள்
இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரலாம் .
பச்சை வாழைப்பழம்
இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் .
புழுங்கலரிசி கஞ்சி
புழுங்கலரிசி உடன் வெந்தயம் , சீரகம் ,பூண்டு சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடித்து வந்தால் அல்சர் சரியாகும் .
தயிர்
தினமும் தயிர் சாப்பிட்டால் நல்ல பாக்டீரியா உற்பத்தி அதிகரித்து அல்சர் சரியாகும் .
பீட்ரூட்
பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட அல்சர் சரியாகும் .
மாதுளை பொடி
மாதுளை பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .
கொத்தமல்லி ஜூஸ்
இந்த ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .