ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரணாப் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி பிரணாப் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தில் ரூ.70 ஆயிரத்தை ஒரு பகுதியிலும், மீதி பணமான ரூ.20 ஆயிரத்தை மற்றொரு பகுதியிலும் தனது ஸ்கூட்டியின் சீட்டுக்கு அடியில் பிரணாப் வைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பிரணாப் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்ததால் பஜார் தெருவில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு அதன்பின் சென்றுள்ளார்.
இதனையடுத்து பிரணாப் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவர் மற்றொரு பகுதியில் வித்திருந்த ரூ.20 ஆயிரம் பணம் தப்பியது. இதுகுறித்து பிரணாப் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.