Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவர்கள்…. உணவு பொட்டலத்தால் நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

காலாவதியான உணவு பொட்டலங்களை சாப்பிட்டதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் சின்னாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் குணா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குணா தனது நண்பரான சசிகுமார் என்ற சிறுவருடன் விளையாட சென்றுள்ளார். இதனை அடுத்து கீழே கிடந்த காலாவதியான உணவு பாக்கெட்டுகளை எடுத்து சாப்பிட்டதால் சிறுவர்கள் இரண்டு பேரும் திடீரென வாந்தி எடுத்து, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குணா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் சசிகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |